மகாராஷ்டிரா-கர்நாடக எல்லை பிரச்சனை குறித்து இரு மாநில முதல்வர்களுடன் அமித் ஷா டெல்லியில் சந்திப்பு நடைபெற்றது.
மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயான பெலகாவி எல்லைப் பிரச்சனை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லியில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோருடன் விவாதித்தார்.
மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா இடையே எல்லைப் பிரச்னை தொடர்பாக இன்று நடைபெற்ற சந்திப்பு நேர்மறையான அணுகுமுறையில் நடைபெற்றது. இந்த எல்லைப்பிரச்சனைக்கான தீர்வு குறித்து சட்டப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று இரு மாநில முதல்வர்களும் ஒப்புக்கொண்டதாக அமித் ஷா, சந்திப்பு முடிந்தவுடன் தெரிவித்தார்.
இதனால் அரசியல் சாசன விதிமுறைகள் பின்பற்றப்பட்டு, இரு மாநிலங்களிலும் சட்டம்-ஒழுங்கு பராமரிக்கப்பட்டு, மக்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படாத வகையில், மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தலைமையில் ஒரு குழுவை அமைத்து அதன்மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண இரு மாநிலங்களும் ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து தவறான தகவல்களை பரப்புவதற்காக இரு மாநில அரசியல் தலைவர்களின் பெயர்களில் ட்விட்டரில் போலிக்கணக்குகள் திறக்கப்பட்டன. இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமித் ஷா மேலும் கூறினார்.
மே 1, 1960 இல் பெல்கான் (தற்போது பெல்காவி) உருவாக்கப்பட்டதிலிருந்து மகாராஷ்டிராவுடன் இணைக்கப்பட வேண்டும் என்று மகாராஷ்டிராவும், இதற்கு கர்நாடகா தனது பகுதியை பிரிக்க மறுத்துவிட்டது. இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை, மேற்கொண்டு இரு மாநிலங்களும் ஒன்றுக்கொன்று உரிமை கோருவதில்லை என்று முடிவெடுத்துள்ளனர்.
இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களின் எதிர்க்கட்சிகளையும் கேட்டுக்கொள்கிறேன் என்று அமித் ஷா கூறியுள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…