2022இல் அதிக நாய்கடிகளை வாங்கிய மாநிலம்.! இரண்டாம் இடத்தில் தமிழகம்.! முதல் இடம்.?

Default Image

அதிக நாய்கடிகளை வாங்கிய மாநிலத்தின் லிஸ்ட்டில் முதலிடத்தில் மகாராஷ்டிராவும், இரண்டாம் இடத்தில் தமிழகமும் உள்ளது.

தெருநாய்களின் தொல்லை இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் அதிகமாக இருக்கிறது. இரவில் தனியாக செல்வோருக்கு பல சமயம் தொந்தரவாகவும், பயமுறுத்தும் வண்ணமும் இருக்கிறது.

இப்படி இந்த 2022ஆம் ஆண்டு அதிக நாய்கடிகளை வாங்கிய மாநிலத்தின் லிஸ்ட் வெளியாகியுள்ளது. அதில், முதலிடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. அங்கு  3,46,318 மருத்துவ வழக்குகள் பதிவாகியுள்ளன. இரண்டாம் இடத்தில் 3,30,264 மருத்துவ வழக்குகளுடன் தமிழகம் உள்ளது.

அடுத்தடுத்த இடங்களில் 1,69,378  நாய்க்கடி மருத்துவ வழக்குகளுடன் ஆந்திரப் பிரதேச மாநிலமும், 1,62,422 மருத்துவ வழக்குகளுடன் உத்தரகாண்ட் மாநிலமும், அதை தொடர்ந்து கர்நாடகா 1,46,094 வழக்குகளையும், குஜராத் 1,44,855 வழக்குகளையும் மற்றும் பீகாரில் 1,18,354 வழக்குகளுடம் பதிவாகி உள்ளன என மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்