வரும் மார்ச் 23ம் தேதி முதல் சத்தியாகிரக போராட்டம்: 4 ஆண்டுகளுக்கு பின் விழித்துக்கொண்ட சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உறுதி
போராட்டத்தை கைவிடக் கோரி அன்னா ஹசாரேவுடன், மஹாராஷ்டிர அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொடர்ந்து, வரும் 23ம் தேதி முதல் சத்தியாகிரக போராட்டத்தை அவர் துவக்க உள்ளது உறுதியாகியுள்ளது.
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, டில்லி ராம்லீலா மைதானத்தில் வரும் மார்ச் 23ம் தேதி சத்தியகிரக போராட்டத்தை துவக்க திட்டமிட்டுள்ளார்.மேலும் அப்போராட்டத்தில் பல லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்றும் தெரிவித்திருந்தார். லோக்பால் மசோதா, விவசாயிகள் பிரச்னையை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர் இப்போராட்டத்தை மேற்கொள்ள உள்ளார்.
இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநில அமைச்சர் கிரீஸ் மகாஜனுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, வரும் மார்ச் 23ம் தேதி அவர் போராட்டத்தில் ஈடுபட உள்ளது உறுதியாகியுள்ளது.
இவர் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை நடத்தியவர். இப்போது மத்திய பிஜேபி அரசு 4 ஆண்டுகள் ஆட்சி செய்த பின்னர் தற்போது விழித்துக் கொண்டு போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளார்.ஏனெனில் மத்திய பிஜேபி அரசு மேல் வியாபம்,ஜெட் விமானம் ஊழல்,இந்திய பணக்காரர்களின் கடன் தள்ளுபடி,அரசின் ஆண்டு விளம்பர செலவு, அமித்சா மகன் சொத்து என எந்தவொரு ஒரு ஊழலும் இதுவரையில் இவரது கண்களுக்கு தெரியவில்லை போல……..