மகாராஷ்டிரா உள்துறை மந்திரிக்கு கொரோனா தொற்று உறுதி …!

மகாராஷ்டிரா உள்துறை மந்திரி திலீப் வால்சே பாட்டீலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக நாட்டில் அதிக அளவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா பாதிப்பு காணப்படுகிறது. இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது குறைந்துள்ளதை அடுத்து, மகாராஷ்டிர மாநிலத்தில் போடப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தின் உள்துறை மந்திரி திலீப் வால்சே பாட்டீலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், எனக்கு லேசான அறிகுறிகள் தென்பட்டவுடன் பரிசோதனை செய்துகொள்ள முடிவு செய்தேன்.
இதில் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்களின் அறிவுரையைப் பின்பற்றி வருகிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் நாக்பூர் மற்றும் அமராவதிக்கு சுற்றுலா வந்தவர்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
After experiencing mild symptoms I decided to get tested for COVID-19. I have tested positive. My condition is stable and I am following my doctor’s advice. I urge all those who came in contact with me during Nagpur & Amravati tour, & other programs, to get themselves tested.
— Dilip Walse Patil (@Dwalsepatil) October 28, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025