மகாராஷ்டிராவின் சுகாதார துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி!
மகாராஷ்டிர மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தபோ அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த ஒரு வருட காலமாக உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தற்பொழுது குறைய ஆரம்பித்துள்ளது. பாதிப்பில் முதலிடம் பிடித்த மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு குறைந்து கொண்டே தான் வந்தது. தற்போது தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்துகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் மக்களிடையே இயல்பு நிலை திரும்பியிருந்தது. இந்நிலையில் இந்த மாதம் மீண்டும் மகாராஷ்டிராவில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதைக் கட்டுப் படுத்துவதற்கான முயற்சியில் மகாராஷ்டிர முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அவர்கள் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று காலை இது குறித்து அவசர ஆலோசனை நடத்தப்பட்டு, ஊரடங்கு அமல் படுத்துவது குறித்து பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் வெளியாகியுள்ள நிலையில் மகாராஷ்டிராவின் சுகாதாரத்துறை மந்திரி ராஜா அவர்களுக்கு தற்போது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை அடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ், உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்துடன் விரைவில் நலமாகி திரும்பி எனது பணிக்கு வருவேன் எனவும், என்னோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் தங்களை பரிசோதித்துக் கொண்டு தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.