மகாராஷ்டிர மாநிலத்தில் 350 அடி உயரத்தில் தற்கால மனு, அரசியலமைப்பின் சிற்பி அம்பேத்கருக்கு வெண்கலச் சிலை அமைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். இந்த சிலையானது தாதர் பகுதியிலுள்ள இந்து மில்ஸின் 12 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்படவுள்ளது. இந்த அம்பேத்காரின் சிலையானது 250 அடி உயரத்தில் அமைக்கலாம் என பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அது தற்போது 350 அடியாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த சிலையின் கீழ் பகுதியில் 100 அடிக்கு அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு நினைவகம் உள்ளிட்டவையும் அமைக்கப்படவுள்ளது, எனவே, இந்த அம்பேத்கர் சிலையின் மொத்த உயரம் 450 அடி வரை இருக்கும். இந்த சிலை கட்டி முடிக்க 2 வருடங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில், ரூ.763 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில்,தற்போது இதன் மதிப்பீடு தற்போது ரூ. 1,069.95 கோடியாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…
கோவை : கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி மண்டல கருத்தரங்கம் ஏப்ரல் 26 மற்றும் 27…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…