மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜகவிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தேர்தல் முடிவில் பாஜக 105 தொகுதிகளிலும்,சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. சிவசேனா தரப்பில் 50-50 பங்கீடு என்ற உடன்படிக்கையின்படி இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சராக்க பாஜகவிடம் தெரிவித்தது.ஆனால் தேவேந்திர பத்னாவிசும் முதல்வர் நான்தான் என்று கூறிவந்தார்.இதனால் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது.
பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றாலும் தனியாக ஆட்சியை அமைக்க முடியாத சூழல் நிலவியது.அதிலும் முதல்வர் பதவியை பாஜகவுக்கு விட்டுக்கொடுக்க சிவசேனா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது.பின்பு மகாராஷ்டிரா சட்டப்பேரவை ஆயுட்காலம் முடிவடைந்த நிலையில், மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை முதல்வர் தேவேந்திர பத்னாவிசு சந்தித்து தனது ராஜினாமா கடித்ததை அளித்தார்.
இந்த நிலையில் பேரவை தேர்தலில் அதிக இடங்களை வென்ற கட்சி பாஜக என்பதால் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ளார் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…