மகாராஷ்டிரா அரசு மோசமாக தோல்வியடைந்துள்ளது – முன்னாள் முதல்வர் விமர்சனம்
கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் மகாராஷ்டிரா அரசு மோசமான தோல்வியை சந்தித்துள்ளது என்று முன்னாள் முதல்வர் குற்றசாட்டு.
நாடு முழுவதும் கொரோனா பரவல் பல்வேறு மாநிலங்களில் தீவிரமடைந்து வருகிறது. முதலில் கேரளாவில் அதிகரித்த கொரோனா பரவல், தற்போது அம்மாநில அரசு நடவடிக்கையால் தற்போது மிகவும் குறைந்துள்ளது. ஆனால், ஆரம்பம் முதல் தற்போது வரை மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத் போன்ற மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதுவும், மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து, 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பு பணியில் மாநில அரசு மோசமாக தோல்வியடைந்துள்ளது என்று அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயண் ரானே குற்றசாட்டியுள்ளார். இதனால் நகராட்சி, அரசாங்க மருத்துவமனைகளை ராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமாறு நான் ஆளுநரை கேட்டுக் கொண்டுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார். இங்கு கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரிப்பதை நாங்கள் பார்க்கிறோம் என்றும் மாநில அரசு நடவடிக்கை மோசமான தோல்வியை கண்டுள்ளது என்று விமசர்னம் செய்துள்ளார்.