#BREAKING : மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரத்தை பொறுத்தவரை மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் அதிகம் உள்ளது. அங்கு இதுவரை இல்லாத அளவாக,நேற்று ஒரே நாளில் 5493 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,64,626 ஆக உயர்ந்துள்ளது.ஒரே நாளில் 156 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2,330 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 86,575 ஆக உயர்ந்துள்ளது. மேலும், அங்கு 70,607 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்தது.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.