மகாராஷ்டிராவில் நாளை (27-11-19) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை மகாராஷ்டிராவில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக இருந்த அஜித் பவார் ஆளுநர் கோஷ்யாரி முன்பதவியேற்றனர்.தேசியவாத காங்கிரஸ் -காங்கிரஸ் -சிவசேனா கூட்டணி தான் ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் பாஜக ஆட்சி அமைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் பாஜக ஆட்சி அமைத்தது தொடர்பாக சிவசேனா -காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதாவது இந்த மனுவில் ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய கோரியும்,நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது விசாரணை இன்று நடைபெற்றது.இதில் நாளை தேவேந்திர பட்னாவிஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.அதாவது நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் இன்று மாலைக்குள் இடைக்கால சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் பேரவையில் நாளை நடைபெறும் வாக்கெடுப்பை டிவி சேனல்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்றும் இடைக்கால சபாநாயகர் தலைமையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.குறிப்பாக ரகசிய வாக்கெடுப்புக்கு அனுமதி இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடி என்கிற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக பேசிய பரத் பாலாஜி…
சென்னை: சென்னையில் 2025-ஐ வரவேற்க தயாரான மெரினா கடற்கரை முழுவதும் பொதுமக்கள் குவிந்துள்ளனர். மெரினா கடற்கரை மணிக்கூண்டு பூக்கள், வண்ண…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் தலைமை…
மணிப்பூர்: மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் வன்முறை நடந்து வருகிறது. இதில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கானோர்…
சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடி (STANDUP COMEDY) என்கிற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக பேசிய பரத்…
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இன்று இரவு கடற்கரை சாலையில் நடைபெற உள்ள புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள்…