தங்களை காப்பாற்றிய மீட்பு படையினரின் காலை தொட்டு வணங்கிய பெண்! நெகிழ்ச்சியான வைரல் வீடியோ உள்ளே!
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை மிகவும் தீவிரமடைந்து உள்ளது. இதனால் பல இடங்களில் வெள்ளம் வந்து மக்கள் பரிதவித்து வருகின்றனர். மஹாராஷ்டிரா மாநிலம் சங்கிலி, கோல்ஹாபூர் ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள அணைகள் நிரம்பியதால் அந்த அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடபட்டது.
இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது. இங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் தவித்து வந்துள்ளனர். இவர்களை மீட்கும் பணிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் பலர் ஈடுபட்டுள்ளனர். அப்போது வெள்ளத்தில் இருந்து தங்களை மீட்ட பாதுகாப்பு படையினரின் காலை ஒரு பெண் தொட்டு வணங்கியுள்ளார். இந்த நெகிழ்ச்சியான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
வெள்ளத்தில் இருந்து தங்களை மீட்ட மீப்பு படையினரின் காலை தொட்டு வணங்கிய பெண்! நெகிழ்ச்சி வீடியோ! #india #FloodRelief #flood2019 #MaharashtraFloods pic.twitter.com/0QKX43JtX3
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) August 12, 2019