மகாராஷ்டிரா தீ விபத்தில் பலியானோருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் – பிரதமர் மோடி..!
மகாராஷ்டிரா தீ விபத்தில் பலியானோருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பால்கர் மாவட்டத்தின், வாசை என்ற இடத்தில் உள்ள விஜய் பல்லவ் என்ற கொரோனா மையத்தின் அவசர சிகிச்சை பிரிவில், இன்று அதிகாலை 3:15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 21 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் கவலைக்கிடமாக உள்ள நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்ற மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்கள், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ள நிலையில், ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.