மகாராஷ்டிரா தேர்தல் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம், நாங்கள் தயாராக இருக்கிறோம் – தாக்கர
சிவசேனா சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்கள் என ர் உத்தவ் தாக்கரே பேச்சு.
மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, மாநிலத்தில் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும், தனது கட்சி தயாராக இருப்பதாகவும் கூறினார். வழக்கு விசாரணையில் உள்ளது, எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என நம்புகிறோம் என்றார். தற்போதைய மகாராஷ்டிரா அரசு அடுத்த 15-20 நாட்களுக்குள் கவிழும் என்று சிவசேனா (யுபிடி) எம்பி சஞ்சய் ராவத் கூறியதை அடுத்து, இவ்வாறு கூறியுள்ளார்.
இதனிடையே, மகா விகாஸ் அகாடி அரசு சிவசேனா கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் அதிருப்தியால் ஆட்சி கவிழ்ந்தது. தாக்கரே மகாராஷ்டிரா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து சிவசேனா கட்சி இரண்டாக பிளவு பட்டது. இது, உத்தவ் தாக்கரே அணிக்கு பெரிய பின்னடைவாக இருந்தது.
இதன்பின், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு சிவசேனா பெயரையும், அதன் தேர்தல் சின்னமான “வில் அம்பையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதுதொடர்பாக உத்தவ் தாக்கரே தொடர்ந்த வழக்கும் விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில், சிவசேனாவில் ஏற்பட்ட பிரிவுக்கு பிறகு முதல் முறையாக ஜல்காவ் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சிவசேனா சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார்கள். எனவே, அவர்கள் அரசியல் ரீதியாக ஒழிக்கப்படுவதை நாம் பார்க்கத்தான் போகிறோம் என்றார்.