மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மகாராஷ்டிர மக்களுக்கு மனமார்ந்த நன்றி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பிரதமர் மோடி தேர்தல் வெற்றிக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.

Maharashtra Election 2024 Result

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில், தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி யும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியும் முன்னிலை வகித்து வருகின்றன.

மகாராஸ்டிரவாரவில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு இடையே காலை போட்டி நடந்து வந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய வெளிட்டு இருக்கும் தகவலின் படி, மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது .

மாலை 5 மணி நிலவரப்படி, மகாராஷ்டிராவில் தற்போது இடங்களை அறிவிக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில், பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது எனவும் மற்ற 84 இடங்களில் முன்னிலை வகிக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹாயுதியின் மற்ற இரண்டு கட்சிகளான சிவசேனா (ஷிண்டே) மற்றும் என்சிபி – முறையே 22 மற்றும் 23 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. கிட்டத்தட்ட பாஜக தலைமையிலான மகாயுதி அணி வெற்றியை உறுதி படுத்திய நிலையில், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து இதனை உறுதி செய்திருக்கிறார்.

பிரதமர் மோடி பதிவு 

பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” வளர்ச்சி வெல்லும்..நல்லாட்சி வெற்றி!..ஒன்றுபட்டால் இன்னும் உயருவோம்!மகாராஷ்டிராவைச் சேர்ந்த எனது சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு, குறிப்பாக மாநிலத்தின் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு, என்.டி.ஏ-வுக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை வழங்கியதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இந்த பாசமும் அரவணைப்பும் இணையற்றது. மகாராஷ்டிராவின் முன்னேற்றத்திற்காக எங்கள் கூட்டணி தொடர்ந்து உழைக்கும் என்று மக்களுக்கு உறுதியளிக்கிறேன்” ஏன நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

அண்ணாமலை வாழ்த்து

மகாராஷ்டிர மக்களுக்கு மனமார்ந்த நன்றி. ஊழல், அதிகார வெறி, பிளவுபடுத்தும் மற்றும் சந்தர்ப்பவாத இந்திய கூட்டணியை மகாராஷ்டிர மக்கள் முற்றிலுமாக நிராகரித்துள்ளனர். பிரதமர் வழிகாட்டுதலின்படி நல்லாட்சி வழங்கிய NDA கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதை தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டியுள்ளது” என வெற்றிக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 26032025
RIP Manoj
TN GOVT
Edappadi Palanisamy
ramandeep singh yuvraj singh
LPG Lorry Strike
thambi ramaiah manoj bharathiraja