மகாராஷ்டிரா: டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு 66 ஆக அதிகரிப்பு..!
மகாராஷ்டிரா மாநிலத்தில் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு 66 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா நோய்த்தொற்று உலக நாடுகளில் வேகமாக பரவி பல்வேறு பாதிப்புகளையும் சேதங்களையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடி தற்போது அங்கு தினசரி பாதிப்பு 6 ஆயிரமாக இருந்து வருகிறது.
இதனால் மொத்தமாக மகாராஷ்டிரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 லட்சத்து 82 ஆயிரத்து 76 ஆக அதிகரித்துள்ளது. இம்மாநிலத்தில் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 730 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவுக்காக 63 ஆயிரத்து 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேசமயத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது 66 பேர் டெல்டா பிளஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.