மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் சம்ருத்தி பகுதியில் விரைவுச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தபோது கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானது. விரைவுச்சாலை அமைக்கும் மூன்றாம் கட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்த சமயத்தில் நேற்று நள்ளிரவு பணி நடைபெற்று இருக்கும்போது 12 மணி அளவில், திடீரென கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் சரிந்து அங்கு பணியில் ஈடுப்பட்டு இருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது. இந்த விபத்தில், இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் கிரேன் சரிந்து விழுந்ததில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் பிஎம் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
விபத்தில் காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் எனவும் பாதித்தோருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும், பிரதமர் மோடி பதிவில், மகாராஷ்டிராவின் ஷஹாபூரில் நடந்த சோகமான விபத்தால் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…