மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 635 ஆக அதிகரிப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் பாதிப்பும், பலியும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்களை சமூக விலகலை கடைபிடிக்குமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 3374 ஆகவும், பலி எண்ணிக்கை 77 ஆகவும் உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 267 பேர் குணமடைந்துள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், இந்தியாவில் அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலம், மகாராஷ்டிரா தான் முதலிடத்தில் உள்ளது. இங்கு பாதிப்பும், உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதனால் அம்மாநிலம் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே மகாராஷ்டிராவில் பாதிப்பு 537 ஆக இருந்த நிலையில், தற்போது 635 ஆக அதிகரித்துள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கொரோனாவால் பாதித்த 635 பேரில் 377 பேர் மும்பையை சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுவரை 52 பேர் வைரஸில் இருந்து குணமடைந்துள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

போப் மறைவு: பிரதமர் மோடி முதல் விஜய் வரை அரசியல் தலைவர்கள் இரங்கல் செய்தி.!

போப் மறைவு: பிரதமர் மோடி முதல் விஜய் வரை அரசியல் தலைவர்கள் இரங்கல் செய்தி.!

சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார். நிமோனியா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வந்த போப் பிரான்சிஸ்,…

2 hours ago

உஷாரா இருங்க!! புழக்கத்தில் புதுவகை 500 ரூபாய் கள்ள நோட்டு.. மத்திய அரசு எச்சரிக்கை.!

டெல்லி : அசலை மிஞ்சும் வகையில் புது வகையான ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக பொதுமக்களுக்கு மத்திய உள்துறை…

2 hours ago

காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு 3 மாதம் சிறை! நாகர்கோயில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

நாகர்கோவில் : கடந்த 2014ஆம் ஆண்டு கன்னியாகுமரி மேற்கு பகுதியில் உள்ள மிடாலம் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு புறம்போக்கு…

2 hours ago

“HIV தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவித்தொகை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.!

சென்னை : 2025-26ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்பொழுது,…

3 hours ago

நீட் தேர்வை ரத்து செய்தால் தான் பாஜகவுடன் கூட்டணி என சொல்ல முடியுமா? முதலமைச்சர் – இபிஎஸ் காரசார வாதம்.!

சென்னை: இன்றைய சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேரத்தில் பேசிய, எடப்பாடி பழனிசாமி மாற்றம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடையே காரசார வாதம்…

4 hours ago

பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இடம்பிடித்த வருண்..வருடாந்திர ஊதியம் இவ்வளவா?

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) 2024-25 சீசனுக்கான (அக்டோபர் 1, 2024 முதல் செப்டம்பர் 30,…

4 hours ago