மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 635 ஆக அதிகரிப்பு.!
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் பாதிப்பும், பலியும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்களை சமூக விலகலை கடைபிடிக்குமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 3374 ஆகவும், பலி எண்ணிக்கை 77 ஆகவும் உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 267 பேர் குணமடைந்துள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலம், மகாராஷ்டிரா தான் முதலிடத்தில் உள்ளது. இங்கு பாதிப்பும், உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதனால் அம்மாநிலம் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே மகாராஷ்டிராவில் பாதிப்பு 537 ஆக இருந்த நிலையில், தற்போது 635 ஆக அதிகரித்துள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கொரோனாவால் பாதித்த 635 பேரில் 377 பேர் மும்பையை சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுவரை 52 பேர் வைரஸில் இருந்து குணமடைந்துள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.
The current count of COVID19 patients in the state of Maharashtra is 635. Including 377 cases of Mumbai Region.
Tilldate 52 people have been cured and discharged from the hospital.#CoronaVirusUpdates #MeechMazaRakshak #मीचमाझारक्षक #मैंहीमेरारक्षक— Rajesh Tope (@rajeshtope11) April 4, 2020