மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று சட்டமேலவை உறுப்பினர் போட்டியிடுவதற்காக வேட்புமனுத்தாக்கல் செய்தார்.
மகாராஷ்ட்ராவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிவசேனா, பாஜக உடனான கூட்டணியை முறித்து கொண்டு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடித்தநிலையில், சிவசேனாத் தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பை ஏற்றார்.
அரசியல் சட்டப்படி சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இல்லாத ஒருவர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் பதவியேற்ற 6 மாத காலத்திற்குள் இரு அவைகளில் ஏதாவது ஒன்றின் உறுப்பினராக பதவி ஏற்க வேண்டும் இல்லாவிட்டால் அவர் முதலமைச்சராக நீடிக்கும் தகுதியை இழந்து விடுவார்.
வரும் மே மாதம் 27-ம் தேதியுடன் உத்தவ் தாக்கரே பதவியேற்று 6 மாதங்கள் முடியுள்ளது. இந்நிலையில், மகாராஷ்ட்ராவில் காலியாக உள்ள 9 சட்டமேலவை உறுப்பினர் இடங்களுக்கு கடந்த 24-ம் தேதி தேர்தல் நடப்பதாக இருந்தது. ஆனால், கொரோனாவால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, வரும் 21-ம் தேதி சட்டமேலவை உறுப்பினர் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால், இன்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே சட்டமேலவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார்.
சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு…
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…
சென்னை : அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…
டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…