மகாராஷ்டிரா முதல்வரின் மனைவி க்கு கொரோனா மருத்துவமனையில் அனுமதி
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மனைவி ரஷ்மி தாக்கரே கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யபட்டுள்ளது.பரிசோதனை செய்த பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனிமைப்படுத்தலில் குறைகள் இருப்பதாக புகார் அளித்த பின்னர்,அவர் ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் என ஏ.என்.ஐ செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது. அவரது மகனும் மகாராஷ்டிரா அமைச்சருமான ஆதித்யா தாக்கரே கோவிட் -19 க்கு ஏற்கனவே கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.