கொரோனா விதிமுறைகளை சரியாக பின்பற்றாமல் இருந்தால் மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என மகாராஷ்டிராவின் முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்கள் எச்சரிக்கை கொடுத்துள்ளார்.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வந்தாலும் தற்போது மீண்டும் புதிய வகை கொரோனா வைரஸ் பல்வேறு இடங்களில் பரவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 4 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று மட்டும் புதிதாக 3660 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் கடந்த ஒரு வாரமாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் மகாராஷ்ட்ராவில் உள்ள சில மாவட்டங்களில் பாதிப்பு குறையாமல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருவதற்கு காரணம் விதிமுறைகள் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளதும், மக்கள் போடப்பட்டுள்ள சில தடுப்பு விதிமுறைகளையும் பின்பற்றாமல் இருப்பதும் தான் என கூறப்படுகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தின் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே அவர்கள் நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலமாக கமிஷனர்கள மற்றும் மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது பேசிய அவர் கலெக்டரிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு சில அறிவுரைகளையும் கூறியுள்ளார். அதில், மக்கள் நலன் கருதி படிப்படியாக விதிமுறைகள் தளர்த்தப்பட்டு உள்ளது. ஆனால், போடப்பட்டுள்ள சில விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் மக்கள் அதிகம் அலட்சியம் காட்டுவது கவலை அளிக்கிறது எனவும் கூறியுள்ள அவர், கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்க போகிறீர்களா? அல்லது மீண்டும் முழு ஊரடங்கு சந்திக்க போகிறீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் முகக் கவசம் அணிவது சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் கட்டாயமாக்கப்பட வேண்டும் அல்லது மாநிலத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்த வேண்டிய நிலைமை வரும் என எச்சரிக்கை கொடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…