மீண்டும் கடுமையான ஊரடங்கை அமல்படுத்துவதை தவிர வேறு வழி இல்லை – மஹாராஷ்டிரா முதல்வர்
மீண்டும் கடுமையான ஊரடங்கை அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான், அதிக அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தொற்றால் பாதிக்கப்பட்ட 202 பேர் பலியாகியுள்ளனர். நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து, மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் கூறுகையில், கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே மீண்டும் கடுமையான ஊரடங்கை அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை. தற்போதைய நிலை தொடர்ந்தால், சுகாதாரத்துறை உள்கட்டமைப்பில் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புண்டு. மேலும் அத்தியாவசிய பொருட்களுக்கு கூட தட்டுப்பாடு ஏற்படும். எனவே நிலைமையை உணர்ந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.