மகாராஷ்டிரா வழக்கு..! சற்று நேரத்தில் வெளியாக உள்ள தீர்ப்பு ..!
மகாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமை பாஜக பட்னாவிஸ் முதலமைச்சராகவும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக இருந்த அஜித் பவார் ஆளுநர் முன் பதவி பதவியேற்றனர். பாரதிய ஜனதா ஆட்சி அமைத்தது தொடர்பாக சிவசேனா , காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை என்றும் அனைத்தும் எம்எல்ஏக்களும் எங்களிடம் இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கூறி வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் உச்சநீதிமன்றம் வழங்க உள்ளது.
நேற்று சிவசேனா , காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் சார்பில் மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் எம்எல்ஏக்கள் அணிவகுப்பு நடைபெற்றது.இந்த அணிவகுப்பில் 150 க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர் என்பது குறிபிடத்தக்கது.