மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தலுக்கு பின் கூட்டணியை அமைத்து கடந்த மாதம் 28-ம் தேதி ஆட்சி அமைத்தது. அப்போது உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பொறுப்பேற்றார் அவருடன் 3 கட்சிகளின் சார்பில் தலா 2 பேர் என 6 பேர் மந்திரிகளாக பதவியேற்று கொண்டனர்.
இதைத்தொடர்ந்து கடந்த 24-ம் தேதி சரத்பவார், உத்தவ் தாக்கரேவை சந்தித்து பேசினார். இவர்கள் இருவரின் சந்திப்பு 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடைபெற்றது. இதன்பின் வருகிற 30-ம் தேதி மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படும் என தேசியவாத காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவி ஏற்பார் என்ற தகவல்களும் வெளியானது.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது துணை முதலமைச்சராக அஜித் பவார் துணை மீண்டும் பதவி ஏற்றார். அஜித் பவார் கடந்த 2014-ம் ஆண்டு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியின் போது துணை முதலமைச்சராக இருந்தார்.
கடந்த நவம்பர் மாதம் பாஜக தலைமையில் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும் , அஜித் முதலமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டனர். ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…