மகாராஷ்டிரா பேருந்து விபத்து..! காயமடைந்தவர்களை நேரில் என்று சந்தித்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே..!
மகாராஷ்டிரா பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நேரில் என்று சந்தித்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து புனே நோக்கி 33 பயணிகளுடன் புல்தானாவில் உள்ள சம்ருதி மகா மார்க் விரைவு சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, நள்ளிரவு 2 மணியளவில் திடீரென்று டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், பேருந்தில் உள்ள டீசல் டேங்க் திடீரென்று தீப்பற்றி எரிந்த நிலையில், பேருந்து முழுவதும் தீ பரவி மூன்று குழந்தைகள் உட்பட பேருந்தில் பயணத்தை 26 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஏழு பேர் படுகாயம் அடைந்த நிலையில் புல்தானா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் விபத்து நடந்த இடத்தை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். இதன்பின் தற்பொழுது, விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று சந்தித்தனர்.
#WATCH | Buldhana bus tragedy | Maharashtra CM Eknath Shinde and Deputy CM Devendra Fadnavis reach Buldhana Civil Hospital where injured patients have been admitted.
25 people died and 8 people sustained injuries in the bus accident. pic.twitter.com/hXRDY1nHwP
— ANI (@ANI) July 1, 2023
மேலும், பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, உயிரிழந்த 26 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.