மகாராஷ்டிரா விவகாரம் -இன்று வழக்கு விசாரணை..!
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் நேற்று காலை திடீரென ஆளுநர் பகத்சிங் முன்னிலையில் பாஜக தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும் துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவராக இருந்த அஜீத் பவார் பதவி ஏற்றுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து நேற்று சரத்குமார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மகாராஷ்ட்ராவில் பட்னாவிஸ் பதவியேற்க ஆளுநர் அழைத்ததை எதிர்த்து காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் இணைந்து நேற்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
அதில் இரவோடு இரவாக அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. மேலும் பாஜக இன்று பெருபான்மை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் எனவும் கூறியிருந்தனர். இந்நிலையில் இன்று காலை 11.30 மணிக்கு அவசர மனுவாக உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.