#BREAKING : இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் இதன் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக அறிவித்தது மத்திய அரசு.மத்திய அரசு கொரோனோ வைரஸை தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்தியாவில் கொரோனாவால் 125 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 64 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். இவர் மும்பை கஸ்துர்பா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நிலையில் உயிரிழந்துள்ளார்.