பால்கர் கும்பல் வன்முறை வழக்கு: 47 குற்றவாளிகளுக்கு ஜாமீன்.!
பால்கர் கும்பல் வன்முறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 47 பேருக்கு தானே மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
மாவட்ட நீதிபதி பி.பி.ஜாதவ் குற்றம் சாட்டப்பட்டவர்களை ரூ .15 ஆயிரம் செலுத்திய பின் ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் இதுவரை 200 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள கட்சிந்தலி கிராமம் வழியாக அவா்களின் காா் சென்றபோது வழிமறித்து ஒரு வன்முறை கும்பல் காரில் இருந்த சிக்னே மகாராஜ், சுசீல்கிரி மகாராஜ், காா் ஓட்டுநா் நீலேஷ் டெல்கடே ஆகியோரை குழந்தை கடத்தல்காரா்கள் என எண்ணி, அவா்கள் மீது அந்த கும்பல் தாக்கியது.
இதில் மூவரும் உயிரிழந்தனா். இந்த வழக்கில் மகாராஷ்டிரா காவல்துறையின் சிஐடி (குற்றம்) குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.