மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு 281 ஆயுர்வேத மருத்துவர்கள் தற்கொலை செய்ய அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளனர்.
281 ஆயுர்வேத மருத்துவர்கள் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரே அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் தங்களை அவமரியாதையாக நடத்துவது தொடர்பாக தங்கள் வாழ்க்கையை தற்கொலை செய்து முடித்துக்கொள்ள அனுமதி கேட்டு முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதியிருக்கின்றனர். இந்த கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது, கொரோனா தொற்றுநோயின் போது ஆயுர்வேத மருத்துவர்களை மாநில அரசு மோசமாக நடத்துவதாக கூறியுள்ளனர்.
கடந்த இருவது வருடங்களாக 18 பழங்குடி மாவட்டங்களில் பணியாற்றி வருவதாகவும், பெரும்பாலும் அடிப்படை வசதிகள் கூட இல்லாத தொலைதூரத்தில் அமைந்துள்ள கிராமங்களுக்கு வருகை தருவதாகவும் பிஏஎம்எஸ் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இங்குள்ள மக்களுக்கு சிறு நோய்கள், பாம்பு-தேள் கடித்தல், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சையளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்கின்றனர்.
ஆயுர்வேத மருத்துவர் ஸ்வப்னில் லோங்கர் எம்.பி.எஸ்.சி (மகாராஷ்டிரா பொது சேவை ஆணையம்) தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அவருக்கு ஒரு பதவி மறுக்கப்பட்டதையடுத்து அவர் தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகு மருத்துவர்கள் கடிதத்தை எழுதியுள்ளனர். இந்த கடிதத்தில் கையொப்பமிட்டவர்களில் ஒருவரான டாக்டர் ஷேஷ்ராவ் சூர்யவன்ஷி, நக்சல் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் பணியாற்றும் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளுக்கு மாநில அரசு சிறப்பு ஊக்கத்தொகை அளிக்கிறது.
இருப்பினும், இதே போன்ற நன்மைகள் மருத்துவர்களுக்கு மறுக்கப்படுகின்றன. மருத்துவர்களுக்கு ரூ.24,000 மட்டுமே சம்பளமாக வழங்கப்படுவதாக கூறியுள்ளார். கடந்த ஆண்டு, டாக்டர்களுக்கும் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் மற்றும் பழங்குடியினர் அமைச்சகத்திற்கும் இடையிலான சந்திப்புக்குப் பிறகு, பழங்குடிப் பகுதிகளில் பணிபுரியும் இந்த 281 ஆயுர்வேத மருத்துவர்களுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.24,000 ரூபாய்க்கு பதிலாக ரூ.40,000 ரூபாய் வழங்கப்படும் என்று முடிவு செய்தனர்.
ஆனால், தற்போது வரை இந்த முடிவு செயல்படுத்தப்படவில்லை என்று கவலை தெரிவித்துள்ளார். மேலும் டாக்டர் சூர்யவன்ஷி, உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசாங்கம் மாநிலத்தின் தொலைதூர மூலைகளில் இருக்கும் பழங்குடியின மருத்துவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்றின் போதும் அவர்கள் மீது எந்த மனிதநேயத்தையும் காட்டவில்லை என்று கூறியுள்ளார்.
ரஷ்யா: ரஷ்யா - உக்ரைன் இடையே ட்ரோன் தாக்குதல்கள் தினசரி நிகழ்வு என்றாலும், உக்ரைனில் இருந்து 1000 கிமீ தொலைவில்…
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா இந்த ஆண்டு கொண்டாடப்படும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை காணலாம். சென்னை :முருகா..…
வேலூர் : கடந்த டிசம்பர் 16ஆம் தேதி கே.வி.குப்பம் அருகே சாலை விபத்தில் சிக்கியது போல மர்மமான முறையில் படுகாயமுற்று…
பெங்களூரு: பெங்களூரு அருகே நெலமங்களா பகுதியில் கார் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 2…
உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் கரம் மசாலாவை எப்படி தயாரிப்பது என்றும், அதன் மருத்துவ பலன்கள் பற்றியும் இச்செய்தி குறிப்பில்…
சென்னை: நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் நேற்றைய தினம் வெளிவந்த "விடுதலை 2" திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை…