பாரத தாயின் புதல்வன் மகாகவி சுப்பிரமணிய பாரதி -மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழில் ட்வீட்.!
மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு மத்திய அமைச்சர் அமித்ஷா பாரத தாயின் புதல்வன் மகாகவி சுப்பிரமணிய பாரதி என்று தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
நாடு முழுவதும் இன்று மகாகவி பாரதியாரின் 139-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.இதனையொட்டி பல அரசியல் தலைவர்கள் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா மகாகவி பாரதியாரின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய புகைப்படத்தை பகிர்ந்து தமிழில் ட்வீட் செய்துள்ளார்.அவர் பகிர்ந்த பதிவில் ,பாரத தாயின் புதல்வன் மகாகவி சுப்பிரமணிய பாரதி அவர்களின் ஜெயந்திக்கு எனது அஞ்சலி. இவர் பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான ஒரு முன்னோடி ஆவார். பாரதி தேசிய ஒற்றுமையின் சின்னமாக விளங்கினார். இவரின் தேசபக்தி கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தின் போது மக்களுக்கு மிகப்பெரிய உத்வேகம் அளித்தன என்று குறிப்பிட்டுள்ளார்.
பாரத தாயின் புதல்வன் மகாகவி சுப்பிரமணிய பாரதி அவர்களின் ஜெயந்திக்கு எனது அஞ்சலி. இவர் பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான ஒரு முன்னோடி ஆவார். பாரதி தேசிய ஒற்றுமையின் சின்னமாக விளங்கினார். இவரின் தேசபக்தி கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தின் போது மக்களுக்கு மிகப்பெரிய உத்வேகம் அளித்தன. pic.twitter.com/CMHFXTCIHe
— Amit Shah (@AmitShah) December 11, 2020