மதுரை ரயில் விபத்து – ஆளுநர் தமிழிசை இரங்கல்…!
உத்திரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தென்னிந்தியாவில் சாமி தரிசனம் செய்வதற்காக 60-க்கும் மேற்பட்டோர் ஒரு பெட்டியில் பயணித்துள்ளனர். இவர்கள் கடந்த 17-ஆம் தேதி யாத்திரையாக தமிழகம் வந்துள்ளனர். நேற்று நாகர்கோவிலை பத்மநாதர் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டு மதுரையை வந்தடைந்துள்ளார்.
இந்த நிலையில், இந்த ரயில் பெட்டியானது மீண்டும் சுற்றுலா செல்வதற்காக வேறொரு ரயிலில் இணைக்கப்படுவதற்காக மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ தூரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இவர்கள் ராமேஸ்வரம் செல்லவிருந்ததாக கூறப்படுகிறது.
மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா விரைவு ரயிலில் தேநீர் தயார் செய்வதற்காக சிலிண்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்போது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், இதுவரை 5 ஆண்கள் 3 பெண்கள் அடையாளம் தெரியாத ஒருவர் என 9 பேர் உயிரிழந்துள்ளனர். 6 காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், ஆளுநர் தமிழிசை அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், மதுரை அருகே ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 10 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்,ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு விபத்தில் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.’ என பதிவிட்டுள்ளார்.
மதுரை அருகே ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 10 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன்.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்,ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு விபத்தில் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று… pic.twitter.com/T2vQKL3wEG
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) August 26, 2023