“நீதியும், தேர்வும் மனுநீதியின் சாயலாகவும், சாரமாக மாறிவிடக்கூடாது என்பதால் நீட் தேர்வை கைவிடுங்கள்!”- சு.வெங்கடேசன்

நீதியும், தேர்வும் மனுநீதியின் சாயலாகவும், சாரமாக மாறிவிடக்கூடாது என்பதால் நீட் தேர்வை கைவிடுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் மக்களவையில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், நீட் என்பது திரிசூலத்தின் மூன்று முனைகளை போல, மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என உரையாற்றினார்.
மேலும், நீட் என்பது திரிசூலத்தின் மூன்று கூர்முனைகள் இருக்கிறது. ஒரு முனையில் மாநில அரசின் கல்வி முறையை மாநில உரிமை ஆகியவற்றை குத்தி கிளிக்கிறதாக தெரிவித்தார்.
மற்றொரு முனை, டீச்சிங்கை கொன்று, கொச்சிங்கை கொண்டாடுகிறது. மூன்றாம் முனை, மாணவர்களின் உளவியலை சிதைத்து தற்கொலைக்கு தள்ளுகிறதாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி, நீதியும், தேர்வும் மனுநீதியின் சாயலாகவும், சாரமாக மாறிவிடக்கூடாது என்பதால் நீட் தேர்வை கைவிடுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.