மதரஸா குழு தேர்தல்..! திரிணாமுல் காங்கிரஸ் கோஷ்டியினர் மோதல்..!
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற மதரஸா குழு தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரின் இரு தரப்புகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள ரதுவா பகுதியில் மதரஸா நிர்வாகக் குழு தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் பாட்னா ஹை மதரஸாவில் (Batna High Madrasah Higher secondary school) உள்ள ஆறு இடங்களுக்கு ஆளுங்கட்சியின் இரு பிரிவினர் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தினர்.
வாக்குப்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே, திரிணாமுல் காங்கிரஸின் (டிஎம்சி) கட்சியின் இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் ரத்வா பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் பைக்குகள் மற்றும் தேர்தல் முகாம்களும் சேதமடைந்தன.
இதனையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் ஆதரவாளர்களை கலைப்பதற்காக துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டுத் தாக்குதலை நடத்தினர். இதில் இரு தரப்பிலும் குறைந்தது மூன்று பேர் பலத்த காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.