100 சதவீத எழுத்தறிவு.! சாதனை படைத்த பழங்குடியினர் மாவட்டம்.!
மத்திய பிரதேச மாநிலம் மண்ட்லா நாட்டின் முதல் 100 சதேவீத எழுத்தறிவு பெற்ற பழங்குடி மாவட்டமாக மாறியுள்ளது
பாஜக ஆட்சிபுரியும் மத்திய பிரதேச மாநிலத்தில் ஓர் பழங்குடியின மாவட்டம் 100 சதவீத எழுத்தறிவு பெற்றுள்ள முதல் பழங்குடியின மாவட்டமாக மாறியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டலா எனும் பழங்குடியின மாவட்டத்தில் அனைவரும் எழுத்தறிவு பெற்றுள்ளனர். இதனால், அம்மாவட்டம் 100 சதவீத எழுத்தறிவு பெற்ற முதல் பழங்குடியின மாவட்டமாக அறிவிக்கப்ட்டுள்ளது.
பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மூலமாகவும் , தன்னார்வலர்கள் மூலமாகவும் இது சாத்தியமானதாக மண்ட்லா மாவட்ட ஆட்சியர் ஹர்ஷிகா சிங் தெரிவித்துள்ளார்.