மத்திய பிரதேச மாநிலத்தில் இடைநிலை கல்வி வாரியத்தின் சார்பில் நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியது. இந்நிலையில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள குத்ருகாட் எனும் கிராமத்தில் வசித்து வரக்கூடிய மாணவி ரஜினி லில்ஹரே என்பவர் ஆங்கிலப் பாடத்தில் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய அந்த பெண் தனது உறவினரிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவாரே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொலைபேசியில் அவர் கிணற்றில் குதிக்கும் சத்தம் கேட்டதும் சிறுமியின் உறவினர் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த குடும்பத்தினர் சிறுமியை மீட்டுள்ளனர். ஆனால், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…