கலைக்கப்பட்டது கமல்நாத் அமைச்சரவை…ம.பி..அரசியலில் பரபரப்பு..கொத்தாக எம்எல்ஏக்கள் பதவி விலகல்..!
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அமைச்சரவை கலைக்கப்பட்டது.பு 16 எம்எல்ஏக்கள் பெங்களூரில் ரிசார்ட்டில் தங்கிய நிலையில் முதல்வர் கமல்நாத் இரவோடு இரவாக அமைச்சரவை கலைத்துவிட்டார். 22 அமைச்சர்களும் இரவோடு இரவாக பதவி விலகிய சம்பவம் மத்தியபிரதேச அரசியலில் அதிரடி திருப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் தன் ஆட்சி கவிழ்வதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கியதை அடுத்து இந்த அதிரடி கலைப்பு நிகழ்ந்துள்ளது.மத்திய பிரதேச அரசியலில் கடந்த வாரம் முதலே அங்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 எம்எல்ஏக்களை பாஜகவினர் கடத்தி வைத்து அடுக்கடுக்காக புகார் வைத்தது காங்கிரஸ்.இவர்களை வைத்து எங்கள் ஆட்சியை கவிழ்க்க பாஜகவினர் திட்டமிடுகிறார்கள் என்று பகீரங்கமாக காங்கிரஸ் கூறி வந்த நிலையில் தற்போது அங்கு அரசியல் குழப்பம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
மத்திய பிரதேசத்திலும் ரிசார்ட் அரசியல் மீண்டும் சூடுபிடித்தது. டெல்லி அருகே குர்கானில் உள்ள ஐடிசி ஹோட்டலில் இவர்கள் அனைவரும் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும் ஆனால் அதில் 8 எம்எல்ஏக்கள் திரும்பி வந்து விட்டதாகவும் இன்னும்2 காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள் டெல்லியில் தான் உள்ளதாகவும். இவர்களை காங்கிரஸ் தலைவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லையாம் இந்த 2பேரும்ள் பாஜக உடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் 6 எம்எல்ஏக்கள் அதிரடியாக பெங்களூரில் ரிசார்ட் ஒன்றில் தங்கிய நிலையில் கடும் நெடுக்கடி கமல்நாத்திற்கு ஏற்படவே அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது. இந்த கலைப்பு முன் முதல்வர் கமல்நாத் இரவோடு இரவாக ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்தார் அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அமைச்சரவை கலைப்பு குறித்த அதிரடி முடிவு எடுத்துள்ளார். மேலும் அம்மாநிலத்தில் 22 அமைச்சர்களும் இரவோடு இரவாக பதவி விலகி உள்ளனர். மாயமான அல்லது மாயமாக்கப்பட்ட 16 எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவை பதவி வழங்கி அவர்களை சமாதானம் செய்கின்ற வகையில் கமல்நாத் இறங்கி உள்ளதாகவும் இது குறித்து அவர் நேற்று மாலை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.
மத்திய பிரதேசத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது.அங்கு தற்போது வரை ஆட்சி செய்த காங்கிரஸ் கூட்டணிக்கு 120 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள்.ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு 113 எம்எல்ஏக்களும், காங்கிரசுக்கு ஆதரவு தரும் பகுஜன் சமாஜ் கட்சியில் 2 எம்எல்ஏக்களும், சமாஜ்வாதி கட்சியில் ஒரு எம்எல்ஏவும், 4 சுயேட்சைகளும் உள்ளனர்,ம.பி ஆட்சி அமைக்க 116 எம்எல்ஏக்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.பாஜகவிற்கு 107 எம்எல்ஏக்கள் பலம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.அங்கு அடுத்தடுத்து நிலவும் அரசியல் குழப்பங்கள் அம்மாநில மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.