மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்த பிறகு தான் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் அரசு, பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும் எனவே சட்டப்பேரவை கூட்டி உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரி பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது, காங்கிரஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடும் அதிகாரமானது ஆளுநருக்கு இல்லை இந்த விவகாரத்தில் சபாநாயகருக்கே இது குறித்து முழு அதிகாரம் உள்ளதாக தனது வாதத்தை முன்வைத்தார். .
மேலும் அவர் ராஜினாமா கடிதம் அளித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள், அனைவரும் பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் அவர்களின் ராஜினாமாவை ஏற்கும் முன் உரிய விசாரணையை அவர்களிடம் நடத்த வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டார்.மேலும் மத்தியப் பிரதேசத்தில் தற்போது காலியாக உள்ள சட்டப்பேரவைக்கு இடைத் தேர்தலை நடத்தி முடித்த பிறகு தான் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தள்ள பாஜக பெரும்பான்மையை இழந்துவிட்டதால் கமல்நாத் அரசு ஒருநாள் கூட பதவியில் நீடிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.இது குறித்து விசாரணையை நடத்தி வருகிறது உச்சநீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.மத்திய பிரதேசத்தில் கடும் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…