மத்திய பிரதேச மாநிலத்தில், தனது மகள் திருமணம் நடைபெற இருந்த நீதிமன்ற வளாகத்திற்குள் வந்த அந்த பெண்ணின் தந்தை, ‘ எனது மகளுக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளது.’ என கூறி திருமணத்தையே நிறுத்திவிட்டார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள காண்ட்வா மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று ஒரு இளம் ஜோடி திருமணம் செய்ய நண்பர்கள் உதவியுடன் பதிவு செய்திருந்தனர். 19 வயது இளம்பெண் கடந்த திங்களன்று தனது காதலர் மற்றும் அவர்களது நண்பர்கள் உடன் வந்திருந்தார்.
இந்த திருமணம் நடைபெற இருந்தபோது, அப்போது நீதிமன்ற வளாகத்திற்குள் வந்த அந்த பெண்ணின் தந்தை, ‘ எனது மகளுக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளது.’ என கூறி அதிரவைத்துள்ளார். இதனை அடுத்து விசாரிக்கையில், அந்த பெண்ணிற்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது உண்மைதான். ஆனால், அப்போது கொரோனா முடிவுகள் வெளியாகவில்லை. இருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பெண்ணை 14 நாட்கள் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளார் என சுகாதாரத்துறை சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இதனை அறிந்த திருமணத்தை ஏற்பாடு செய்திருந்த வழக்கறிஞர் வீரேந்திர வர்மா, இந்த சம்பவத்திற்க்கு பின்னர் அந்த பெண்ணை வீட்டுக்கு அனுப்பி வைத்தார். வேறொரு நாளில் திருமணத்தை நடத்தி கொள்ளலாம் என இளம் ஜோடிக்கு அறிவுறுத்தினார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘ என்னிடம் இருவரும் வருகையில் அவர்களுக்கு எந்தவித அறிகுறியும் இல்லை. அவர்கள் இருவருமே 18 வயதை கடந்தவர்கள்.’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…