முத்தம் கொடுக்க மறுத்த 12ஆம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்டார்!

Default Image

மத்திய பிரதேச மாநிலம் ஜாபல்பூர் பகுதியில் பிங்கி (18) எனும் பள்ளி மாணவி 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் தனது ஆண் நண்பரான ராமன் சிங்குடன் கடந்த வியாழக்கிழமை அன்று பிஜாபூரி எனும் கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார்.

பின்னர், அவர் வீடு திரும்பவில்லை என தெரிகிறது. இது குறித்து பிங்கியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில்,அவரை தேடும் பணி தீவிரமடைந்தது. தேடல்களுக்கு பின்னர், அவரது உடல் பிஜாபூரரி காட்டுக்குள் கண்டறியப்பட்டது. அவள் பின் தலையில் பலமாக அடிபட்டு இறந்தது தெரியவந்தது.

பின்னர், நடைபெற்ற தீவிர விசாரணையில் ராமன் சிங்குடன் பிங்கி சென்றது நிரூபணமாகி அவரை போலீசார் தீவிரமாக விசாரித்தனர். பின்னர் நடந்தவற்றை ராமன் சிங் போலீசில் கூறினார். அதாவது, காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற ராமன் சிங்  பிங்கியிடம் முத்தம் கொடுக்க முயன்றுள்ளார். அப்போது பிங்கி மறுக்கவே, பிங்கியை தள்ளி விட்டார், இதில் பிங்கி தலையில் பலமாக அடிபட்டு இறந்துவிட்டார் என கூறினான்.  அதன் பின்னர் ராமன் சிங் அங்கிருந்து தப்பியோடி விட்டதாக தெரிகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்