70 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து நொறுங்கிய லிஃப்ட்! ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி!

Published by
மணிகண்டன்
  • தொழிலதிபர் புனித் அகர்வால் தனது குடும்பத்தாருடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்துள்ளார்.
  • புத்தாண்டு கொண்டாட்டம் முடிவடைந்து அவரது வீட்டில் உள்ள லிஃப்டில் குடும்பத்தினர் ஏறிய போது அது எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது.

நாடு முழுவதும் நேற்று ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தது. அந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஒரு வீட்டில் லிப்ட் ஒன்று 70 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த புனித் அகர்வால் தனது குடும்பத்தாருடன் தனது வீட்டில் புத்தாண்டு கொண்டாடியுள்ளார். புத்தாண்டு கொண்டாட்டம் முடிவடைந்ததும் தனது குடும்பத்துடன் லிப்டில் ஏறியுள்ளார்.

அவருடன் இணைத்து மகள் பாலக் அகர்வால், மருமகன் பலகேஷ் அகர்வால், பேரன் நவ், உறவினர்கள் ஆகியோர் உடன் இருந்தனர் அப்போது எதிர்பாராதவிதமாக லிஃப்ட் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் 70 அடி உயரத்தில் இருந்த அந்த லிஃப்ட் சரசரவென கீழே விழுந்தது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரும் பலியாகினர். சம்பவ இடத்திலேயே ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பரிதாபமாக இறந்துவிட்டனர். இந்த சம்பவத்தில் நித்தி என்கிற உறவு பெண் மட்டும் உயிருக்கு போராடி சிகிச்சை பெற்று வருகிறார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…

8 hours ago

ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி… தவெக தலைவர் விஜய் பங்கேற்பு.!

சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…

9 hours ago

நம்மகிட்ட பட்ஜெட் கொடுத்தா லாபம் தாறுமாறா இருக்கும்…கெத்துக்கட்டும் ‘டிராகன்’ அஷ்வத்!

சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…

10 hours ago

IND vs AUS : சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதி போட்டி… வானிலை, பிட்ச் நிலவரம்.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…

11 hours ago

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! கேப்டன் பொறுப்பை தூக்கி ரஹானேயிடம் கொடுத்த கொல்கத்தா!

கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…

11 hours ago

நாகை மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்..!

நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…

13 hours ago