மத்திய பிரதேசத்தில் இன்றைக்குள் முதலமைச்சர் கமல்நாத் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் எச்சரிக்கையுடன் கூடிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்து கிளம்பிய பனிப்போர் காரணமாக ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்களாக இருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 பேர் திடீரென்று ராஜினாமா செய்ததை அடுத்து ஆளும் கமல்நாத் ஆட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்படவே அந்த மாநில ஆளுநர் லால்ஜி டான்டன், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கமல்நாத் அரசுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று மத்திய பிரதேசத்தில் நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் நடந்தது. ஆனால் பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்படமால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதனால் சட்டப்பேரவையில் தனது பலத்தை இன்றைக்குள் நிரூபிக்க வேண்டும் என்று ம.பி முதல்வர் கமல்நாத்துக்கு ஆளுநர் உத்தர விட்டார். அவ்வாறு வாக்கெடுப்பு நடப்படா விட்டால்;ஆட்சியை இழக்க நேரிடும் என்று எச்சரித்தார். இதனைத் தொடர்ந்து நேற்று இரவு அவசரமாக ஆளுநரை கமல்நாத் சந்தித்து பேசினார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கமல்நாத் சட்டத்திற்கு உட்பட்டு அனைத்தும் செய்ய தயாராக உள்ளோம் என்று கூறினார்.இந்நிலையில் இன்று வாக்கெடுப்பு நடத்த கெடு விதிக்கப்பட்டு இருப்பதால் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் முதல்வர் கமல்நாத்துக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜின், LCU-விற்கெனவே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. கூலி படத்திற்கு அடுத்தபடியாக,…
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை…
நியூ யார்க் : உலகமே எதிர்நோக்கி காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) இந்திய நேரப்படி மாலை…
சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வந்த காரணத்தால் நகை வாங்கும் நகை பிரியர்கள்…
சென்னை : மக்களை எமோஷனலில் உருக வைத்துள்ள அமரன் படம் வசூல் ரீதியாகவும் கலக்கிக் கொண்டு இருக்கிறது. வசூல் ஒரு…
சென்னை : தமிழக அரசின் முறைப்படி, அரசாங்க திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை கள ஆய்வு மேற்கொள்ள அரசாங்க நிகழ்வுகளில்…