கொரோனா ஊசி போடுவதாக பரவிய வதந்தி.! அதிகாரிகளை கல் வீசி துரத்திய பொதுமக்கள்.!
கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் வேறு யாருக்கும் பரவாமல் கட்டுப்படுத்த மக்கள் சமூக விலகலை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு வருகிறது.
மத்திய பிரதேசத்தில், உள்ள இந்தூரில், தத்பாக்கி எனும் குடிசை பகுதியில் வசிக்கும் மக்களில் சிலருக்கு கொரோனா பரவியுள்ளது. அங்குள்ள யாரும் வெளியூருக்கு போனதில்லை இதனால் அங்கு எப்படி கொரோனா பரவியது என அதிகாரிகள் சோதித்து வருகின்றனர். மேலும் 65 வயது முதியவர் கொரோனாவால் பலியாகியுள்ளார்.
இதனை தொடர்ந்து, அங்கு சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த வந்தனர். அந்த சமயம் அங்குள்ளவர்கள் வாட்ஸாப்பிற்கு ஒரு வதந்தி பரவியுள்ளது. அதில், அப்பகுதியில் நலமுடன் இருக்கும் மக்களுக்கு அதிகாரிகள் கொரோனா ஊசி போட வந்துள்ளார்கள் என கூறப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அங்கு வந்த சுகாதார துறை அதிகாரிகளை அப்பகுதி மக்கள் கல்லால் அடித்து விரட்டினர். இந்த வீடியோ வைரலாக பரவியதை அடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அந்த வதந்தியை பரப்பிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ‘ மருத்துவ பணியாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.’ என தெரிவித்தார்.