மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர்கள் எச்சரிக்கை; கங்கனா ரணாவத்திற்கு பாதுகாப்பு அதிகரிப்பு
புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி டெல்லியில் எல்லை பகுதிகளில் 78 நாட்களாக பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் போராடு வருகின்றனர்.இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா ஏன் இதை பற்றி யாரும் பேசுவதில்லை என்று ட்வீட் செய்திருந்தார்.
சர்ச்சைக்குரிய ட்வீட் :
அத பின்னர் ரிஹானா ட்வீட் க்கு பதிலடி கொடுக்கும் விதமாக கங்கனா ரணாவத் சர்ச்சைக்குரிய ட்வீட் செய்திருந்தார்.அதில் டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல, அவர்கள் இந்தியாவைப் பிளவுபடுத்த முயற்சிக்கும் பயங்கரவாதிகள். இதனால் பாதிக்கப்படக்கூடிய நமது தேசத்தை அமெரிக்காவைப் போல, சீனா எளிதாக பிளவுபட்ட நாட்டுக்குள் நுழைந்துவிடும்.முட்டாள் ! நாங்கள் உங்களைப் போல எங்கள் தேசத்தை விற்கவில்லை’’ என கங்கனா ரணாவத் தனது டுவிட்டர் பக்கத்தில் ரிஹானாவுக்கு பதிலடி கொடுத்திருந்தார்.
மன்னிப்பு கேட்க வேண்டும் :
இந்நிலையில் தனது ட்வீட் தொடர்பாக விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்காவிட்டால், ஒரு படத்திற்காக படப்பிடிப்புக்கு அனுமதிக்க மாட்டேன் என்று மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.இதனை அடுத்து, மத்திய பிரதேச போலீசார் பாலிவுட் நடிகர் கங்கனா ரனவுத்திற்கு வழங்கப்படும் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.
கங்கனா ரணாவத் நடிக்கும் ‘தாகத்’ படத்தின் படப்பிடிப்பு பெத்துல் மாவட்டத்தின் சர்னி பகுதியில் நடைபெற்று வருகிறது.இது குறித்து பி.டி.ஐ-யுடன் பேசிய சர்னி நகர காவல்துறை கண்காணிப்பாளர் (சி.எஸ்.பி) அபய் ராம் சவுத்ரி,மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா பெத்துல் படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு போலீசாரிடம் கேட்டுக் கொண்டதாகக் கூறினார்.