6 பேருக்கு கொரோனா பரப்பிய சலூன் கடைக்காரரால் கிராமம் முழுவதும “சீல்” வைக்கப்பட்டுள்ளது !
உலகளவில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து நிலையில் இந்தியாவில் மட்டும் கொரோனா வைரஸால் 24,942 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 779 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 56 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவை தடுக்க முகக்கவசம் மற்றும் தனிநபர் இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் இந்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் கார்கோன் என்ற ஊரிலுள்ள சலூன் கடைக்காரர் ஒருவர் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரே பிளேடு மற்றும் ஒரே துணியைப் பயன்படுத்தி சேவிங் மற்றும் முடி வெட்டியுள்ளார்.
இதனால் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த கிராமத்தில் சிலருக்கு கொரோனா அறிகுறி இருப்பதால் கிராமம் முழுவதும் “சீல்” வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மத்திய பிரதேச மக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை : கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் உலகையே அதிரவைத்தது. இந்த தாக்குதலை…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய…
டெல்லி : 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அரசு ஏற்றுக்கொண்டது.…
சென்னை : தீபாவளியையொட்டி, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம் வெற்றிகரமாக 4வது வாரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. சொல்லப்போனால், சிவகார்த்திகேயன்…
மும்பை : 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று கடந்த சனிக்கிழமை முடிவுகள் வெளியானது. இந்த முறையும்…
சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருக்கிறது. இது இலங்கைக்கு கீழே இருந்து…