மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்..!

சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவி காலம் இந்தாண்டுடன் முடிவடைகிறது. இதனால், இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் தேதியை கடந்த 9-ஆம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

அதன்படி, மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 சட்டப்பேரவை தொகுதிகளில் நவம்பர் 7ம் தேதியும், சத்தீஸ்கரில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 2 கட்டங்களாக நவம்பர் 7 மற்றும் 17ம் தேதியும் தேர்தல் நடையேற உள்ளது.

தச்சர்களிடம் மர நாற்காலி செய்ய கற்று கொண்ட ராகுல் காந்தி.!

இதுபோன்று, மத்திய பிரதேசத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவ.14ம் தேதியும், ராஜஸ்தானில் 200 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவ.23ம் தேதியும், தெலுங்கானாவில் 119 தொகுதிகளில் நவம்பர் 30ம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 144 வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் இந்தப் பட்டியலில் மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத், மத்தியப் பிரதேச முன்னாள் உயர்கல்வி அமைச்சர் ஜிது பட்வாரி, ஜெயவர்தன் சிங், மத்தியப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர் விஜயலட்சுமி சாதோ ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இதனை தொடர்ந்து அடுத்தகட்டமாக காங்கிரஸ்  மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 88 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்