இந்த சாதிக்கொடுமைகள் எப்போது தீருமோ?! மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்த இன்னொரு கொடூரம்!

Published by
மணிகண்டன்

மத்திய பிரதேசத்தில் உள்ள அலிராஜ்பூர் எனும் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு 19 வயது பெண் ஒருவர் வேற்று சாதி ஆணை காதலித்ததற்காக அந்த ஊர் மக்களே அந்த பெண்ணை அடித்து விரட்டினர். அந்த பெண்ணின் தாவணியை உருவி அடித்து விரட்டியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து அப்பகுதி காவல்துறையினர், ‘ பாதிக்கப்பட்டவர்கள் தற்போது வரை எந்த புகாரும் அளிக்கவில்லை. எனவும், அந்தப் பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் தற்போது அந்த கிராமத்தில் இல்லை. என்பதாலும், அவர்களது வாக்கு மூலத்தையும் வாங்க முடியவில்லை எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் இந்த சம்பவம் போலவே ஏற்கனவே இதே அலிராஜ்பூரில், ஒரு பழங்குடியின தம்பதியர் ஒன்றாக இருந்ததற்காக அந்த ஊரில் கம்பத்தில் கட்டிவைத்து தாக்கப்பட்டனர்.

மத்திய பிரதேசத்தில் தாரா மாவட்டத்தில் வேற்று சாதி ஆணை காதலித்ததற்காக ஒரு பெண் தாக்கப்பட்டார். அதேபோல கடந்த ஏப்ரல் மாதம் வேற்று சாதி ஆணை காதலித்து திருமணம் செய்ததற்காக அந்தப் பெண்ணின் கணவனை அந்த பெண்ணின் தோள் மீது ஏற சொல்லி அந்த பெண்ணையும் அந்த கணவரையும் தாக்கி துன்புறுத்தியுள்ளனர்.  மேலும், ஜனவரி மாதம், அலிராஜ்பூர்  மாவட்டத்தில் ஒரு கொடூர சம்பவமாக, வெவ்வேறு சாதியில் காதலித்து திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் அடித்து துன்புறுத்தப்பட்டு ஊர்மக்கள் முன்னிலையில் அந்த பெண்ணை தன் கணவனுக்கு தாய்ப்பால் கொடுக்க வைத்த கொடூரம் எல்லாம் அங்கே அரங்கேறி உள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!

டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…

9 minutes ago

“மக்களுக்காக பணியாற்ற மீண்டும் ஒரு வாய்ப்பு” -அமைச்சர் மனோ தங்கராஜ் நெகிழ்ச்சி!

சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு…

28 minutes ago

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

9 hours ago

கடுகு சிறுசு தான் காரம் பெருசு! சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…

9 hours ago

இந்தியா தாக்குதல் நடத்தலாம்…எங்கள் படைகளை வலுப்படுத்தியுள்ளோம்! – பாகிஸ்தான்!

பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

9 hours ago

பறக்கவிட்ட பட்லர்..சுழற்றி அடித்த கில்! ராஜஸ்தானுக்கு குஜராத் வைத்த டார்கெட்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

10 hours ago