இந்த சாதிக்கொடுமைகள் எப்போது தீருமோ?! மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்த இன்னொரு கொடூரம்!

மத்திய பிரதேசத்தில் உள்ள அலிராஜ்பூர் எனும் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு 19 வயது பெண் ஒருவர் வேற்று சாதி ஆணை காதலித்ததற்காக அந்த ஊர் மக்களே அந்த பெண்ணை அடித்து விரட்டினர். அந்த பெண்ணின் தாவணியை உருவி அடித்து விரட்டியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து அப்பகுதி காவல்துறையினர், ‘ பாதிக்கப்பட்டவர்கள் தற்போது வரை எந்த புகாரும் அளிக்கவில்லை. எனவும், அந்தப் பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் தற்போது அந்த கிராமத்தில் இல்லை. என்பதாலும், அவர்களது வாக்கு மூலத்தையும் வாங்க முடியவில்லை எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் இந்த சம்பவம் போலவே ஏற்கனவே இதே அலிராஜ்பூரில், ஒரு பழங்குடியின தம்பதியர் ஒன்றாக இருந்ததற்காக அந்த ஊரில் கம்பத்தில் கட்டிவைத்து தாக்கப்பட்டனர்.
மத்திய பிரதேசத்தில் தாரா மாவட்டத்தில் வேற்று சாதி ஆணை காதலித்ததற்காக ஒரு பெண் தாக்கப்பட்டார். அதேபோல கடந்த ஏப்ரல் மாதம் வேற்று சாதி ஆணை காதலித்து திருமணம் செய்ததற்காக அந்தப் பெண்ணின் கணவனை அந்த பெண்ணின் தோள் மீது ஏற சொல்லி அந்த பெண்ணையும் அந்த கணவரையும் தாக்கி துன்புறுத்தியுள்ளனர். மேலும், ஜனவரி மாதம், அலிராஜ்பூர் மாவட்டத்தில் ஒரு கொடூர சம்பவமாக, வெவ்வேறு சாதியில் காதலித்து திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் அடித்து துன்புறுத்தப்பட்டு ஊர்மக்கள் முன்னிலையில் அந்த பெண்ணை தன் கணவனுக்கு தாய்ப்பால் கொடுக்க வைத்த கொடூரம் எல்லாம் அங்கே அரங்கேறி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!
April 25, 2025
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025