மத்திய பிரதேசத்தில் டிரக்கின் தொட்டியில் மறைந்து பயணம் செய்த 18 பேர் மீது வழக்கு பதிவு
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கான்கிரீட் மிக்சர் டிரக்கின் தொட்டியில் மறைந்து பயணம் செய்த 18 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன் விளைவாக மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளே அடங்கியுள்ளனர்.மேலும் வெளி மாநிலத்தில் வேலை பார்ப்பவர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதற்குஇடையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கான்கிரீட் மிக்சர் டிரக்கின் தொட்டியில் மறைந்து 18 பேர் மகாராஷ்டிராவில் இருந்து லக்னோவிற்கு பயணம் மேற்கொண்டு உள்ளனர் .இதனையறிந்த போலீசார் பயணம் செய்த கான்கிரீட் மிக்சர் டிரக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் பயணம் செய்த 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.