மத்திய பிரதேச மாநிலத்தில் 54 பேருடன் சென்ற பேருந்து கால்வாயில் விழுந்தது
மத்திய பிரதேச மாநிலத்தில் 54 பேருடன் சென்ற பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் விழுந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சித்தி என்ற பகுதியில் இருந்து சட்னா நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 54 பயணிகள் பயணித்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது ஓட்டுநர் கட்டுப்பாட்டை பேருந்து இழந்த நிலையில் சித்தி என்ற பகுதியில் உள்ள கால்வாயில் விழுந்துள்ளது.பேருந்தில் பயணித்த 7 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.