மத்திய பிரதேசத்தில் 50 மாவட்டங்களில் 144 தடை

- குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்
- மத்திய பிரதேச மாநிலத்தில் 50 மாவட்டங்களுக்கு 144 தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் பற்றிய போராட்ட தீ தற்போது தலைநகர் டெல்லியில் கொழுந்துவிட்டு எரிக்கின்றது.சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர் இதனை கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் காங்கிரஸ் ஆளும் மத்தியபிரதேசத்திலும் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் அம்மாநிலத்தில் உள்ள மொத்தம் 52 மாவட்டங்களில் 50 மாவட்டங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் மக்கள் ஒன்று கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.